புதுச்சேரி மாநிலத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் புதுச்சேரியில் உள்ள பள்ளிகள், இனி வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே இயங்கும் எனவும், சனி, ஞாயிறு விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 31ஆம் தேதி வரை ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை செயல்படும் என்றும், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, பள்ளிகள் தொடர்ந்து வாரத்தில் ஐந்து நாள்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று (மார்ச்.18) கரோன தடுப்பூசி ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் நிலை குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கேட்டறிந்தார். அப்போது, புதுச்சேரியில் கரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளதால் பள்ளிகளை தற்காலிகமாக மூட வேண்டும் என துணைநிலை ஆளுநருக்கு சுகாதாரத்துறை பரிந்துரைத்தது.
![புதுச்சேரி சுகாதாரத் துறை புதுச்சேரியில் பள்ளிகளை மூட சுகாதாரத் துறை அறிவுறுத்தல் Puducherry Health Department புதுச்சேரி கரோனா நிலவரம் புதுச்சேரி கரோன செய்திகள் Puducherry Corona Status Puducherry Corona News Puducherry Corona Status Puducherry Corona News](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pud-02-governor-health-department-tn10044_19032021080316_1903f_1616121196_783.jpg)
அதேபோல், புதுச்சேரியில் முகக்கவசம் அணியும் இயக்கத்தைத் தொடங்கி மக்கள் இயக்கமாக அதனை மாற்ற வேண்டும். மருத்துவ மாணவர்களையும், முன் களப்பணியாகளையும் இணைக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் பரிந்துரைத்தனர். இது குறித்து பள்ளிக்கல்வித்துறையுடன் சுகாதாரத்துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்!