சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கள ஒருங்கிணைப்பு குழு (Field Support Team) அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் இன்று (ஏப்ரல்.20) நடைபெற்றது. இதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமை தாங்கினார்.
அப்போது ஹர்மந்தர் சிங் பேசியதாவது, "சென்னையில் நாள்தோறும் 12,000 முதல் 16,000 வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பரிசோதனைகளை 25,000 ஆக உயர்த்த வேண்டும்.
சென்னையில் காய்ச்சல் முகாம்களை வார்டு ஒன்றிற்கு இரண்டு என்கின்ற அடிப்படையில் நாள்தோறும் 400 முகாம்கள் நடத்த வேண்டும். தொற்று பாதித்த நபர்களை கரோனா தடுப்பு மையங்களுக்கு அழைத்து வர தேவையான வாகன வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 கரோனா தடுப்பு மையங்களில் 12,000 படுக்கை வசதிகளை தயார் படுத்த வேண்டும்.
அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத தனி நபர்கள், வணிகர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: பகல் நேரத்தில் வெளி மாவட்ட பேருந்துகள் இயக்கம்