துக்ளக் இதழின் 51ஆவது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) நடைபெற்றது. இதில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும் பாஜக மாநில தலைவர் எல். முருகன், துணை தலைவர் அண்ணாமலை, அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நீதிபதிகளின் நியமனத்தை விமர்சித்திருந்தார். அதாவது, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்காக அரசியல்வாதிகள் ஆதரவை தேடுகிறார்கள் என்று கூறியிருந்தார்.
நீதிபதிகள் குறித்த குருமூர்த்தியின் விமர்சனம் சர்ச்சையை கிளப்பியது. நீதித்துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் குருமூர்த்தி பேசியிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டன குரல் எழும்பின.
இந்நிலையில், நீதிபதிகள் குறித்து பேசியதற்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், ‘நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தோர் என கூறுவதற்கு பதில், நீதிபதிகள் என்று குறிப்பிட்டுவிட்டேன். நீதித்துறை, நீதிபதிகள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...டிஆர்பி வழக்கு: பார்க் மாஜி சிஇஓ மருத்துவமனையில் அனுமதி!