சென்னை விமான நிலையத்திலிருந்து ஜெய்ப்பூருக்குச் செல்லும் விமானத்தில், பயணிகளின் உடைமைகளைப் பாதுகாப்பு அலுவலர்கள் சோதித்தனர். அப்போது டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் சொல்லாகி (39) என்பவரின் கைப்பையைப் பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை செய்ததில், கைத்துப்பாக்கியின் 7.55 எம்.எம். ரக குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
துப்பாக்கி குண்டுகள்
விசாராணையில் அவர், தன்னிடம் துப்பாக்கி லைசென்ஸ் மற்றும் உரிய ஆவணங்களும் உள்ளதாகவும் தனது பாதுகாவலர் கைப்பையை அவசரமாக எடுத்து வந்ததில் தவறுதலாகத் துப்பாக்கி குண்டுகள் வந்துவிட்டன என்றும் கூறினார். இதையடுத்து துப்பாக்கி குண்டுகளை சென்னை விமான நிலைய காவல் துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில், தூத்துக்குடி தொழிலதிபர் ஒருவரிடம் 15 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் டெல்லி தொழில் அதிபரிடம் இருந்து 2 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையம் - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்