ETV Bharat / city

ஆளுநர் மாளிகை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி!

சென்னை: ஆலந்தூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்றனர்.

rally
rally
author img

By

Published : Dec 28, 2019, 2:13 PM IST

Updated : Dec 28, 2019, 2:50 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில், கிண்டியை அடுத்த ஆலந்தூர் நீதிமன்ற வளாகம் அருகில் இந்திய முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், அனைத்து ஜமாத்தார்கள் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இன்று ஒன்றிணைந்தனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் 650 அடி நீளமுள்ள தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி மக்களை மத ரீதியில் பிரிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்றனர்.

இந்தியா எங்கள் தாய்நாடு; இசுலாம் எங்கள் வழிபாடு - பல்லாயிரக்கணக்கானோர் பேரணி

அப்போது, மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் மோடி, அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், அதையும் மீறி பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து கலந்து கொண்டது அங்கு சொற்ப அளவில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினரை திக்குமுக்காட வைத்தது.

இதையும் படிங்க: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து தேசியக் கொடியேந்தி போராட்டம்!

Intro:குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து சென்னை ஆலந்தூரில் பல்லாயிரக்கணக்கானோர் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர்

Body:சென்னை ஆலந்தூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி யில் ஈடுபட்டு வருகின்றனர்

குடியுரிமை திருத்த சட்டத்தைக் கண்டித்து பல இடங்களில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தற்போது கிண்டி அடுத்த ஆலந்தூர் நீதிமன்றம் வளாகம் அருகில் இந்தியன் முஸ்லிம் லீக்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,அனைத்து ஜமாத்தார்கள் மற்றும் அனைத்து மாவட்டங்களில் இருந்து வந்திருக்கின்ற இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து ஆண்கள்,பெண்கள், சிறுவர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு 650 அடி நீளமுள்ள தேசியக் கொடியை கையில் ஏந்தியபடி மக்களை மத ரீதியில் பிரிக்கும் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேரணியில் பாஜக அரசை கண்டித்தும் மோடி அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பி பேரணியில் ஈடுபடுகின்றனர்

Conclusion:
Last Updated : Dec 28, 2019, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.