ETV Bharat / city

கிராம சபை கூட்டம் ரத்து வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்! - மக்கள் நீதி மய்யம் மனு

சென்னை: தமிழ்நாட்டில் கிராம சபை கூட்டங்கள் நடத்தாதது குறித்து ஜனவரி 22 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

aa
aa
author img

By

Published : Nov 6, 2020, 2:36 PM IST

தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சட்டப்படியும், கிராமசபை கூட்ட விதிகளின்படியும் ஆண்டுக்கு நான்கு முறை, கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியை ஒட்டி, கிராமசபை கூட்டங்கள் நடத்துவதற்கு பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர், செப்டம்பர் 26ஆம் தேதி வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், கரோனா தொற்றை காரணம் காட்டி, அக்டோபர் 2ஆம் தேதி நடக்க இருந்த கிராமசபை கூட்டங்களை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர். இதை எதிர்த்து, நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், கிராமங்களின் நிர்வாகம், வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டப்படும் கிராமசபை கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், எந்த முக்கிய காரணமும் இல்லாமல் கிராம சபை கூட்டங்களை ரத்து செய்தது சட்டவிரோதமானது என கூறப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட கிராம சபை கூட்டங்களை நடத்தக்கோரி ஊரக வளர்ச்சித் துறை இயக்குனருக்கு அனுப்பிய மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று(நவ.6) நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஜனவரி 22ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இதே கோரிக்கையுடன் திமுக எம்எல்ஏ, கே.என்.நேரு தொடர்ந்த வழக்கோடு இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ட்ரம்பின் வார்த்தைகளைக் கொண்டே அவரை பழிதீர்த்த 'கிரேட்'டா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.