ETV Bharat / city

கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் மெரினாவில் பிரமாண்ட பேனா சிலை அமைக்க அரசு திட்டம்

கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் மெரினா கடலில் 134 அடி உயரத்திற்கு பிரமாண்டமான பேனா வடிவ தூண் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் எழுத்தாற்றலை போற்றும் வகையில் நடுக்கடலில் ‘பேனா'வடிவ பிரம்மாண்ட தூண்

author img

By

Published : Jul 22, 2022, 6:59 PM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சரும் மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7 ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடியில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.

உதயசூரியன் வடிவத்தில் அமைக்கப்படும் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவத்தில் பிரம்மாண்ட தூண் ஒன்றும் அமைக்கப்படுகிறது.
கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்த நவீன ஒளிப்படங்களும் அந்த நினைவிடத்தில் அமைகிறது.

இந்தப் பணிகள் நடந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் நடுக்கடலில் ரூ.80 கோடி செலவில் பிரம்மாண்ட வடிவம் ஒன்றை 134 அடி உயரத்திற்கு அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரம்மாண்ட பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய கேட் அமைத்து அதன் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் வங்ககடலில் 650 மீட்டர் தூரத்துக்கு இரும்பு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கப்பட உள்ளது.

இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் அமையும் வகையில் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட கட்டு மானத்துக்கு 'முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்' என்று பெயரிடப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ரூ.80 கோடி மதிப்பில் அமைய உள்ள இந்த திட்டம் கடலோர முறை ஒழுங்கு ஆணையத்தின் அனுமதிக்காக விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தலைமைச் செயலகத்திற்கு வந்து வழக்கமான பணிகளை தொடங்கிய முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.