ETV Bharat / city

பேரிடர் மேலாண்மை சட்டப்படியே அரியர் தேர்வு ரத்து - தமிழ்நாடு அரசு - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின்படி அரியர் தேர்வு ரத்து உத்தரவு, யூஜிசி விதிகளுக்கு முரணாக இல்லாத பட்சத்தில் அரசு முடிவெடுக்கலாம் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

highcourt
highcourt
author img

By

Published : Sep 8, 2020, 5:23 PM IST

கலை, அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களையும் தேர்ச்சி என அறிவித்த தமிழ்நாடு அரசின் முடிவை ரத்து செய்யக்கோரி, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

அந்த மனுவில், ”கல்வியின் தரம், மாணவர்களின் எதிர்காலம், பல்கலைக்கழகங்களின் மாண்பு ஆகியவற்றை காப்பதற்காகவே இவ்வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அரசின் முடிவு மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தரத்தை தாழ்த்தும் வகையில் உள்ளது. தேர்வுகளில் பங்கேற்றால்தான் மாணவர்களிடம் நம்பிக்கை, செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை பிரதிபலிக்கும்.

தேர்வு நடைமுறை குறித்த முடிவுகளை எடுக்க சிண்டிகேட், செனட், அகாடமிக் கவுன்சில் ஆகியவை உள்ள நிலையில், தேர்வு நடைமுறைகளில் அரசு தலையிடுவது தவறு. எனவே, உடனடியாக அரசின் இம்முடிவை ரத்து செய்ய வேண்டும் ” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விரு வழக்குகளையும் சேர்த்து விசாரித்த, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வில், மனுதாரர் பாலகுருசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆஜராகி, அரியர் தேர்வுகளை ரத்து செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும், யுஜிசி உத்தரவுக்கு முரணாக அரசு முடிவெடுத்துள்ளதாக ஏஐசிடிஇ-யும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

இதையடுத்து ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், பேரிடர் மேலாண்மை சட்ட விதிப்படியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இறுதி பருவத்தேர்வு மாணவர்களை தேர்வில்லாமல் தேர்ச்சி பெற செய்யக்கூடாது என அறிவித்துள்ளதாகவும் கூறினார். மேலும், பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின்படி அரியர் தேர்வு ரத்துக்கான உத்தரவு, யூஜிசி விதிகளுக்கு முரணாக இல்லாத பட்சத்தில் மாநில அரசு முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இரு வழக்குகள் குறித்தும் தமிழ்நாடு அரசு, பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆகியவை இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: அரியர் ஆல்-பாஸ் பண்ணவச்சதுக்கு நன்றி ஐயா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.