ETV Bharat / city

'நிபந்தனைகளுடன் மீன்பிடிக்கச் செல்லலாம்' - தமிழ்நாடு அரசு - Govt announces permission to fishing in curfew

சென்னை: குறிப்பிட்ட சில ஒழுங்குமுறை நிபந்தனைகளுடன் நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

'நிபந்தனைகளுடன் மீன்பிடிக்க செல்லலாம்' - தமிழக அரசு

author img

By

Published : Apr 15, 2020, 9:47 AM IST

கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது. இந்த சூழ்நிலையில் கூட்டத்தைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துவிதமான மீன்பிடிப்புக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பு தங்கள் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் என்றும் தடையை நீக்கி மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து மீனவர்கள் வலியுறுத்திவந்தனர். இந்நிலையில் தற்போது நாட்டுப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், "நாட்டுப்படகுகள், 10 ஹெச்.பி.க்கு மிகாத வண்ணம் உள்பொருத்தும், வெளிப்பொருத்தும் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள் மட்டுமே மீன்பிடிப்பிற்கு அனுமதிக்கப்படும். இயன்றவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, குறைந்த அளவிலான மீனவர்களைக் கொண்டு மீன்பிடிப்பு மேற்கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், "மொத்தமுள்ள கிராமங்களில், குறிப்பிட்ட நாளில் 50 விழுக்காடு மீன்பிடி கிராமங்கள் மட்டும், ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மொத்த மீன்பிடி படகுகளில் 50 விழுக்காடு படகுகள் மட்டுமே மீன்பிடிப்பிற்குச் செல்ல அனுமதிக்கப்படும்.

மீன்பிடி துறைமுகம், இறங்குதளங்களில் குறிப்பிட்ட நாளில் 300-க்கும் அதிகமான படகுகள் மீன்பிடிக்க அனுமதியில்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘மீனவக் குடும்பங்களுக்கு மீன்பிடி குறைவு கால உதவித் தொகை ரூ.88.41 கோடி’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.