தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) நேற்றிரவு (அக். 12) உடல்நலக் குறைவால் சேலத்தில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க் கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ச. இராமதாசு, மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி இராமதாசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி., சட்டப்பேரவை எதிர்க் கட்சி கொறடா அர.சக்கரபாணி, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் சார்பாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகன், திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் தொலைபேசி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சரை தொடர்புகொண்டு தங்களது இரங்கலைத் தெரிவித்து, ஆறுதல் கூறினார்கள்.
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் சார்பில் வெளியிட்டப்பட்டுள்ள இரங்கல் செய்தியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்ளவதோடு தனது தாயாரை இழந்து வாடும் தமிழ்நாடு முதலமைச்சருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வாக்குவாதம்: திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு