ETV Bharat / state

"நாராயணன் பயணம் பல தமிழக மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்" - மு.க.ஸ்டாலின் புகழாரம்! - MK STALIN

இஸ்ரோவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாராயணனின் பயணம், அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின், வி.நாராயணன்
மு.க.ஸ்டாலின், வி.நாராயணன் (MK Stalin X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 18 hours ago

சென்னை: இஸ்ரோவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாராயணனின் பயணம், அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும் எனத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவின் தற்போதைய தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணனை மத்திய அரசின் நியமனக் குழு தேர்வு செய்துள்ளது. இவர் வரும் 14ம் தேதி பொறுப்பேற்று, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இஸ்ரோவின் தலைவராகச் செயல்படவுள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இஸ்ரோவின் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள நாராயணனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, "இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி.நாராயணன் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: இஸ்ரோவின் புதிய சேர்மன் நாராயணன்! தமிழ்நாட்டைச் சேர்ந்த 3-வது தலைவர்!

அப்படியென்றால், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. சந்திரயான் 2, சந்திரயான் 3, ஆதித்யா எல்-1, ககன்யான் என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த - தொடர்ந்து பங்களித்து வரும் நாராயணன் தலைமையில் இஸ்ரோ உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும். நாராயணனின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்" எனத் புகழாரம் சூட்டி வாழ்த்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.