ETV Bharat / city

’ஒடுக்கப்பட்டோரின் குரலாக இருந்தவர் பஸ்வான்’ - ஆளுநர் புரோகித் இரங்கல்! - ராம்விலாஸ் பஸ்வான்

சென்னை: ஒடுக்கப்பட்டோரின் குரலாக மறைந்த ராம்விலாஸ் பஸ்வான் திகழ்ந்தார் என தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

purohit
purohit
author img

By

Published : Oct 9, 2020, 9:45 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ”மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம், ரசாயனங்கள் மற்றும் உரம், சுரங்கங்கள், தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் தொழிலாளர் நலத்துறை என மத்திய அரசின் பல்வேறு முக்கியத் துறைகளில் அமைச்சராக அர்ப்பணிப்புடன் செயலாற்றியவர்.

லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனராகவும், நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அவர், அரசியலில் தொலைநோக்குப் பார்வை கொண்டவராவார். எளிமை, பணிவு, ஆளுமைத்திறன் கொண்டதோடு மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்தார். தனது வாழ்நாள் முழுவதும் நலிந்த மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் செய்த பங்களிப்பு என்றென்றும் நினைவு கூறப்படும்.

அவரது மறைவு இந்திய மக்களுக்கு, குறிப்பாக பிகார் மாநில மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.