சென்னை: சுவாமி விவேகானந்தர் இந்தியா திரும்பிய 125ஆவது ஆண்டு விழாவையொட்டி, சென்னையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் லட்சுமி ரவி ஆகியோர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
சிகாகோவில் (அமெரிக்காவில்) நடந்த உலக மதங்களின் மாநாட்டில், தனது வரலாற்று உரைக்குப் பிறகு விவேகானந்தர் இந்தியா திரும்பினார்.
அவரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம், குழந்தைப் பருவ கண்காட்சிகள் மற்றும் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களின் படங்களையும் ஆளுநர் பார்த்தார்.
மேலும் ஆளுநர் சுவாமி விவேகானந்தர் இந்தியா திரும்பிய 9 நாட்களுக்குப் பிறகு, தங்கியிருந்த தியான அறையில் தியானம் செய்தார்.
பின், தமிழ்நாடு ஆளுநர் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று, விவேகானந்தர் நவராத்திரி விழா 2022 மற்றும் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் 125ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்றார்.
சுவாமி விவேகானந்தர் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணர் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தியதுடன், அவர்களின் அருங்காட்சியகங்களையும் ஆளுநர், தனது துணைவியாருடன் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: லதா மங்கேஷ்கர் மறைவு - நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி