சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியர் சுபஸ்ரீ என்பவர், கடந்த வியாழக்கிழமையன்று பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பள்ளிக்கரணை பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மேல் விழுந்தது. இதில் நிலை தடுமாறிய சுபஸ்ரீ, பின்னால் வந்த தண்ணீர் லாரியில் சிக்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், குரோம்பேட்டை பவானி நகரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சுபஸ்ரீயின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.
உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு அரசு தரப்பில் ஆறுதல் கூட தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது” என்ற அவர், ”பேனர் குறித்து உரிய சட்டம் கொண்டு வந்தால் தான் காவல் துறையினர் அதை வழிநடத்த முடியும்” என்றார்.