ETV Bharat / city

ஓலா, ஊபர் வாகனங்களை அரசே இயக்க திட்டம்? அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

author img

By

Published : Jul 30, 2022, 8:34 PM IST

தமிழ்நாட்டில் ஓலா, ஊபர் உள்ளிட்ட வாடகை வாகனங்களை அரசே இயக்குவதற்கான சாத்தியகூறுகளை ஆராயும் பணிகள் தொடங்கி உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஓலா, ஊபர் வாகனங்கள் அரசே இயக்க திட்டம்? அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்

சென்னை: பசுமை வழிச் சாலையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக 25 மாணவர்களுக்கு ஸ்மார்ட் வாட் வழங்கப்பட்டுள்ளது. இதனை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்த ஏதுவாக 'DOT' எனும் ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் எளிதில் எழுத்துக்களை அறிந்துக்கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பவியல் துறையில் ’State family database’ திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூகத்திற்கு பயனுள்ள மாற்றங்களை உருவாக்க இந்த திட்டம் பயன்பெறும். இ-சேவை 2.0 திட்டத்தை மேம்படுத்தப்பட்ட திட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக 76 திட்டங்களை செயல்படுத்துவதற்கான வேலைகள் முழு வீச்சில் நடைப்பெற்று வருகிறது.

கேரளாவை போன்று தமிழ்நாட்டிலும் ஓலா, ஊபர் வாகனங்களை அரசே இயக்குவதற்கான சாத்தியகூறுகளை ஆராயும் பணி தொடங்கியுள்ளது. மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டமாக இது இருந்தால் நிச்சயம் செயல்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

முதலமைச்சர் மேற்கொண்டு வரும் சீரிய முயற்சியின் காரணமாக பல்வேறு தொழில்நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தருகின்றன. அதன் மூலம் வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது. இதுவே 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய முதற்படி என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ”இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழியாக முடியாது” முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.