சென்னை: மாநகராட்சி அலுவலர்கள், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் இன்று காலை ஐஐடி வளாகத்தில் வளர்க்கக்கூடிய நாய்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்ய முயற்சி செய்தபோது, அவர்களை அங்கிருந்த அலுவலகப் பணியாளர்கள் தடுத்து நிறுத்த முற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
விலங்குகள் நல ஆர்வலர்களின் கூற்றுப்படி, ஐஐடியில் கடந்த 2020ஆம் ஆண்டு 189 நாய்கள் இருந்தது. ஆனால், தற்போது 60 நாய்கள்தான் உயிரோடு இருக்கின்றன. மீதமுள்ள 111 நாய்களின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை எனக் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், நீதிமன்ற ஆணையின்படி, 19 உடல் நலக்குறைவு உள்ள நாய்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விலங்குகள் நல ஆர்வலர் அருண் பிரசன்னா நம்மிடம் கூறுகையில், "இந்தப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. எனவே, இந்த வழக்கை திரும்பப் பெறும் பொருட்டு, ஐஐடி நிர்வாகம் அலுவலர்களைத் தூண்டிவிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயற்சிக்கிறது," எனக் கூறிய அவர் வளர்ப்பு நாய்களை ஐஐடி நிர்வாகம் சரிவர பராமரிக்கவில்லை என்பதை இந்தப் போராட்டம் காட்டுகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.
சரியாகப் பராமரித்து இருந்தால் அவர்கள் ஆய்வு செய்யும் அலுவலர்களை முற்றுகையிட்டிருக்கத் தேவையில்லை எனவும் கூறினார்.
இதையும் படிங்க: ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு - கண்டனம் தெரிவித்த அரசியல் தலைவர்கள்