மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு ஊக்கத்தொகை ரூபாய் ஆயிரத்து 500-லிருந்து 2000 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மனவளர்ச்சி குன்றியவர்கள், கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய் தண்டுவட மரப்பு நோய் ஆகிய நாட்பட்ட நரம்பியல் பாதிப்புக்குள்ளான நபர்கள், தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகை ஆயிரத்து 500-லிருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
2 லட்சத்து 15 ஆயிரத்து 505 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உயர்த்த 31 கோடியே 7 லட்சத்து 91 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனால் ஆண்டு ஒன்றுக்கு 124 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2022 - தொழில்துறையினரின் கோரிக்கைகள்