சென்னை: மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் மே 6ஆம் தேதி முதல் மே20ஆம் தேதி வரை அலுவலகம் வருவதற்கு முழுமையாக விலக்களித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரோனா பெருந்தொற்று மிகவேகமாக பரவி வரும் நிலையில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி மே 6ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை சில கட்டுப்பாடுகளுடன் தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தி ஆணையிடப்பட்டுள்ளது. அதில், அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அதிகபட்சமாக 50 விழுக்காடு பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, கரோனா பெருந்தொற்று காலத்தில் மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்களின் பாதுகாப்பை கருதி மே 6ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், அலுவலகத்திற்கு வருவதில் இருந்து முழு விலக்களிப்படுகிறது“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.