ETV Bharat / city

அரசுப் பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்! - அரசு பேருந்துகள்

சென்னை: தொழிலாளர்களைக் குழுவாக அழைத்து வருவதற்கும், திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும் அரசுப் பேருந்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

bus
bus
author img

By

Published : Aug 10, 2020, 6:57 PM IST

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் கரோனா பரவலையடுத்து அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு மட்டும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசின் பல்வேறு துறை பணியாளர்கள், தலைமைச் செயலக, உயர் நீதிமன்ற ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக, தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், முன்னர் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட்டுவந்த அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் தற்போது 75 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்வேறு தொழில் நிறுவன தொழிலாளர்களைக் குழுவாக அழைத்து வருவதற்கும், திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தொலைதூர பயணம் மேற்கொள்வதற்கும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் பேருந்துகள் தேவைப்படுவோர் ‘9445014402, 9445014416, 9445014424 மற்றும் 9445014463 ‘ ஆகிய கைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இரவிலும் அண்ணா மேம்பாலத்தைத் திறக்க முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.