ETV Bharat / city

யுகாதி வாழ்த்தோடு 'அந்த' வேண்டுகோளையும் வைக்கத் தவறாத தமிழிசை! - Telugu New Year Birth

தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான மருத்துவர் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கு ஆண்டுப் பிறப்பு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அத்தோடு அவர் மக்களுக்கு வேண்டுகோள் ஒன்றையும் விடுத்துள்ளார்.

Tamilisai
Tamilisai
author img

By

Published : Apr 12, 2021, 12:49 PM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தெலுங்கு ஆண்டுப் பிறப்பான யுகாதி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மனதளவில் ஒன்றுபட்டு நம் நாட்டின் ஆரோக்கியத்திற்காகக் கரோனா தடுப்புப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இந்த யுகாதியைக் கொண்டாடுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

'அந்த' வேண்டுகோள்!

மேலும், தகுதியானவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கரோனா பரவாமல் தடுத்து அரசின் முயற்சிகளுக்குத் துணைநிற்போம் எனப் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுத்த தமிழிசை, அனைவருக்கும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க தனது யுகாதி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.