சென்னை விமான நிலையத்திற்கு நேற்று (அக்டோபர் 18) காலை சார்ஜாவிலிருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளைச் சுங்கத் துறை அலுவலர்கள் தீவிரமாகச் சோதனைசெய்தனர்.
அப்போது அதில் வந்த ஆறு பயணிகள் மீது சந்தேகமடைந்து அலுவலர்கள் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர்.
இதனால், அவர்களைத் தனி அறைக்கு அழைத்துச்சென்ற அலுவலர்கள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் உடமை, உள்ளாடைக்குள் 2.67 கிலோ கிராம் தங்கக்கட்டிகள், மின்னணுப் பொருள்கள் கடத்திவந்தது தெரியவந்தது.
அதன் பன்னாட்டு மதிப்பு 1.40 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பாக இருவரைக் கைதுசெய்து சுங்கத் துறை அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: விமான நிலையத்தில் 511 கிராம் தங்கம் பறிமுதல்