தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துவருகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உள்ளூர் சந்தையில் தங்கம் விலை மாற்றம் அடைந்துவருகின்றது.
அதன்படி, இன்று (ஜன. 08) சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து, ஆபரணத் தங்கம் 4,754 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது. வெள்ளி ஒரு கிராம் 74 ரூயாய் 50 காசுகளுக்கு விற்கப்படுகின்றது. நேற்றைய (ஜன. 07) தினத்துடன் ஒப்பிடுகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.39,080 இருந்த நிலையில், இன்று (ஜன. 08) ரூ.408 குறைந்து ஒரு சவரன் தங்கம் 38,032 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
புத்தாண்டு தினத்திலிருந்து இன்றுவரை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்தது இதுவே முதல் முறை. சர்வதேச சந்தையில் கடந்த சில நாள்களாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள் தங்கம் விலை எதிரொலித்துவருவதாக சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க...பள்ளிகள் திறக்கவில்லை - திரையரங்கங்களுக்கு மட்டும் 100% அனுமதி எப்படி சாத்தியம்!