சென்னை: சென்னை பாடி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜலட்சுமி.(46) இவர் அண்ணாநகர் டிவிஎஸ் காலனியில் உள்ள கடையில் காய்கறிகள் வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், ராஜலட்சுமி கழுத்தில் இருந்த ஏழு சவரன் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு, தப்பியோடினார்.
இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராஜலட்சுமி காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து ஜெஜெ நகர் காவல்நிலையத்தில் ராஜலட்சுமி புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, மர்ம நபரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை... பதறவைக்கும் வீடியோ...