ETV Bharat / city

கத்தியைக் காட்டி பணம், நகைகள் கொள்ளை!

சென்னை: திருவொற்றியூரில் வீட்டினுள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியைக் காட்டி பணம், நகைகளைக் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

robbery
robbery
author img

By

Published : Apr 20, 2021, 10:31 AM IST

திருவொற்றியூர் கலைஞர் நகர் ஒத்தவாடை தெருவைச் சேர்ந்தவர் ஜோதி (45). இவரது மனைவி கலைவாணி வீட்டில் மழலையர் பள்ளி நடத்திவருகிறார். நெகிழித் தொழில் செய்துவரும் ஜோதி தொழில் காரணமாக வெளியே சென்றுள்ளார்.

தனது 14 வயது மகளுடன் வீட்டில் இருந்தபோது மாலை நேரத்தில் திடீரென இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத ஐந்து அடையாளம் தெரியாத நபர்கள் முதல் மாடிக்கு வந்து வீட்டினுள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

பணம், நகையை கொடுக்காவிடில் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதை அடுத்து பீரோவில் இருந்த 8 சவரன் நகை, 4000 ரூபாய் ஆகியவற்றை அடையாளம் தெரியாத நபர்கள் திருடினர்.

அப்போது கலைவாணி சத்தம் போடவே கீழ் வீட்டில் வாடகைக்கு இருந்த நபர்கள் மாடிக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் தப்பித்து ஓடிவிட்டனர். அப்போது அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஒன்றை விட்டுவிட்டு தப்பி ஓடினர்.

திருவொற்றியூரில் பணம், நகைகளை கொள்ளை
இது குறித்து காவல் நிலையத்தில் கலைவாணி புகார் அளிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் உதவி ஆணையர், சாத்தாங்காடு ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் 20 வயதுக்குள்பட்ட நபர்கள்தான். கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்தில் தக்க சமயம் பார்த்து வீட்டினுள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பணத்தையும் நகையையும் பறித்துள்ளனர். 10 பேர் கொண்ட தனிப்படை இரண்டு குழுக்களாக அமைத்து தேடி வருவதாகவும் வெகு விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்வோம் எனவும் காவல் துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.