ETV Bharat / city

யுவராஜூக்கு ஆயுள் தண்டனை: 'தூக்கை விட சரியானது இது' - கோகுல்ராஜின் தாயார்

தீர்ப்பு வழங்கப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் நாங்கள் உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனையைக் கேட்டோம் என்றும்; ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள சாகும்வரை ஆயுள் தண்டனையும் சரியானதுதான் என கொலைசெய்யப்பட்ட பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜின் தாயார் கூறியுள்ளார்.

Gokulraj Mother Chithra
Gokulraj Mother Chithra
author img

By

Published : Mar 8, 2022, 7:32 PM IST

Updated : Mar 8, 2022, 8:14 PM IST

மதுரை: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்த, வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த மார்ச் 5ஆம் தேதி, 10 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் இன்று வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், இன்று (மார்ச் 8) காலை 11 மணியளவில் விசாரணை தொடங்கியது.

கெஞ்சிய குற்றவாளிகள்; மன்னிக்காத தாய்

நீதிபதி வழக்குத் தொடர்புடைய அனைவரிடமும் கருத்துக் கேட்டார். குற்றவாளிகள் 10 பேரும் தாங்கள் நிரபராதிகள் எனக் கூறினர். கோகுல்ராஜின் தாயார் சித்ரா தனது மகனின் படுகொலைக்குக் காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து பிற்பகல் 3 மணியளவில் நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கான தண்டனை விவரங்களை அறிவித்தார்.

குற்றவாளிகளின் தண்டனை விவரம் பின்வருமாறு, இந்த வழக்கின் முதல் குற்றவாளியான யுவராஜூக்கு (42) 3 ஆயுள் தண்டனையும் ரூபாய் ஐந்தாயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

யுவராஜின் கார் ஓட்டுநர் அருண் (29), குமார் (எ) சிவக்குமார் (43), சதீஷ்குமார் (33), ரகு என்ற ஸ்ரீதர் (28), ரஞ்சித் (29), செல்வராஜ் (38) ஆகியோருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும் ரூபாய் ஐந்தாயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.

'மீண்டும் நீதியை மீட்டது மதுரை'

சந்திரசேகரன் (51) என்பவருக்கு ஆயுள் தண்டனையும், பிரபு (41), கிரிதர் (30) ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக கூடுதலாக 5 ஆண்டுகள் மற்றும் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

கொலை, கூட்டுசதி, ஆள்கடத்தல் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ், இவர்களுக்கு நீதிபதி தண்டனையை அறிவித்தார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த சங்கர், அருள்செந்தில், செல்வகுமார், தங்கதுரை (யுவராஜின் சகோதரர்), சுரேஷ் ஆகியோரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

தண்டனை குறித்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வாதாடிய ப.பா.மோகன், "தன்னுடைய சாதியைச் சேர்ந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்தார் என்பதற்காகவே பட்டியல் சாதியைச் சேர்ந்த கோகுல்ராஜை கடத்திச்சென்று கொடூரமாக வெட்டிக்கொலை செய்துள்ளார்கள். கோகுல்ராஜை சுயமாக தற்கொலை என பேச வைத்து இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இன்று காலை நடைபெற்ற நீதிபதியின் கருத்துக்கேட்பில்கூட நாங்கள் இந்த வழக்கை அரிதிலும் அரிதான வழக்காக எடுத்துக்கொள்ள மதுரை நீதிமன்றத்தில் வேண்டுகோள்விடுத்தோம். இன்று வழங்கப்பட்ட இறுதி தண்டனையில், குற்றஞ்சாட்டப்பட்ட 10 நபர்களுக்கும் இறக்கும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இனி இந்த நிலைமை வரக்கூடாது...

ஏற்கெனவே, கோகுல்ராஜின் தாயார் சித்ராவுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மாவட்ட ஆட்சியர் கூடுதல் தொகையை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கண்ணகி நீதி கேட்ட மதுரை மண்ணில் பட்டியல் சமூக இளைஞரின் கொடூர கொலைக்கும் நீதி கிடைத்துள்ளது" என்றார்.

கோகுல்ராஜின் தாயார் சித்ரா பேசுகையில், "தீர்ப்பு வழங்கப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் நாங்கள் உச்சபட்ச தண்டனையான தூக்குத் தண்டனையை கேட்டோம். ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள சாகும்வரை ஆயுள் தண்டனை சரியானதுதான். இதுபோன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இந்த சம்பவம் ஒரு பாடமாக அமையும். இதுபோன்ற நிகழ்வு எந்த தாயாருக்கும், பெற்றோருக்கும் இனி வரவே கூடாது. தற்போது நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ள ஐந்து நபர்களுக்கும் நாங்கள் மேல்முறையீடு செய்து தண்டனை பெற்றுத்தருவோம்" என்றார்.

இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை

Last Updated : Mar 8, 2022, 8:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.