ETV Bharat / city

பொதுவிநியோக திட்டத்தில் சர்க்கரை குடும்ப அட்டையை, அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம்! - Sugar Option Family Cards

சென்னை: பொதுவிநியோக திட்டத்தில் சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்துள்ளார்.

பொதுவிநியோக திட்டத்தில் சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம்!

author img

By

Published : Dec 5, 2020, 5:11 PM IST

இது குறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொது விநியோகத் திட்டத்தில் கீழ் தமிழ்நாட்டில் தற்போது 5,80,298 குடும்ப அட்டைகள், சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன.

இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்திருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் கீழ்க்கண்ட உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டைகளை தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்கான விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து, இன்று (5.12.2020) முதல் 20.12.2020 வரை www.tnpds.gov.in என்ற இணைய முகவரியிலும், சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.

பொதுவிநியோக திட்டத்தில் சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம்!
பொதுவிநியோக திட்டத்தில் சர்க்கரை குடும்ப அட்டையை அரிசி அட்டையாக மாற்ற விண்ணப்பிக்கலாம்!

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை குடும்ப அட்டைகள் (Sugar Option Family Cards), தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக (Rice Option Family Cards) மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சென்னையில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 3.4%

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.