ETV Bharat / city

புதிதாக ரூ.18.87 கோடி மதிப்பில் சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் பாதுகாப்பான நவீன கழிவறைகள் - சென்னை மேயர் பிரியா

சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் 132 பள்ளிகளில் 792 பாதுகாப்பான நவீன கழிவறைகளும், 159 பள்ளிகளில் வயது வந்த பெண்குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் பிரத்யேக நவீன கழிவறைகளும் கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 30, 2022, 7:32 PM IST

Iசென்னை: மத்திய உள்துறை அமைச்சகத்தின் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் திட்டத்தின் கீழ், சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் 132 பள்ளிகளில் 792 பாதுகாப்பான நவீன கழிவறைகளும், 159 பள்ளிகளில் வயது வந்த பெண் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் கழிப்பறைகள் கட்டுவதற்கு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் இன்று (ஆக.30) நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, 'மத்திய உள்துறை அமைச்சகத்தின் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம்' என்ற திட்டம் மூலம் ரூ.425 கோடி மதிப்பில் கடந்த 3 ஆண்டுகளாக பெண்களுக்கு, பொது இடங்களில் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை மாநகராட்சிப்பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான கழிவறைகளை கட்டுவதற்கு சென்னை மாநகராட்சி இன்று (ஆக.30) தீர்மானம் கொண்டு வந்துள்ளது. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 25 மாணவர்களுக்கு ஒரு கழிவறை என்ற அடிப்படையில் கழிவறைகள் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தேவையான எண்ணிக்கையில் கூடுதலாக கழிவறைகள் கட்டப்பட்டு வருகிறது.

அந்தவகையில் புதிதாக ரூ.18.87 கோடி மதிப்பில் இரண்டு கட்டங்களாக, சென்னை மாநகராட்சியின் 132, நடுநிலை, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 20 ஆயிரம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் 792 கழிவறைகள் கட்டப்பட உள்ளன.

மாநகராட்சியின் 159 பள்ளிகளில் வயது வந்த பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான 225 நவீன கழிப்பறை கட்டப்பட உள்ளன. இந்தத் திட்டத்தை இரண்டு கட்டங்களாக செயல்படுத்த உள்ளநிலையில் முதல் தொகுதியில் முதற்கட்டமாக ரூ.6.52 கோடி மதிப்பில் 100 பள்ளிகளிலும், இரண்டாம் கட்டத்தில் ரூ.7.27 கோடி மதிப்பில் 91 பள்ளிகளிலும் கட்டப்பட உள்ளன.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரத்தின் திட்டத்தின்கீழ், குற்றங்கள் அதிகம் நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புப் பணியை மேம்படுத்தி, பெண் காவலர்கள் ரோந்துப்பணி மேற்கொள்ள வாகனங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்துதல், பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான நவீன கழிவறைகள் ஏற்படுத்துதல் உள்ளிட்டப் பல்வேறு பணிகள் நிர்பயா நிதியின் கீழும் மேற்கொள்ளப்படும் நிலையில், பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கழிவறை கட்டும் பணிகள் மேற்கொள்ள இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: புதுமைப்பெண் திட்டத்தொடக்கவிழா... அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் அழைத்த அன்பில் மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.