ETV Bharat / city

சினிமா மோகத்தில் மூக்கை பெரிதாக்கிய இலங்கை தாதா? - தியானேஸ்வரன்

கோயம்புத்தூரில் உயிரிழந்த இலங்கை தாதா அங்கோடா லொக்கா, பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை மூலம் தனது மூக்கை பெரிதாக்கிய தகவல் வெளியான நிலையில், அதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

Sri Lankan Angoda Lokka Angoda Lokka Cinema Crazy murder, kidnapping, extortion, criminal activities Thiyaneshwaran Sivakami Sundari சினிமா மோகத்தில் மூக்கை பெரிதாக்கிய இலங்கை தாதா சந்தன லசந்த பெரேரா அங்கோடா லொக்கா போதைப் பொருள் சிவகாம சுந்தரி தியானேஸ்வரன் Gangster Angoda Lokka had Plastic surgery in Coimbatore

author img

By

Published : Aug 12, 2020, 12:01 PM IST

கோவை: இலங்கையை சேர்ந்தவர் சந்தன லசந்த பெரேரா என்ற அங்கோடா லொக்கா. பிரபல தாதாவான இவர் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஏழு பேரை கொலை செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அந்நாட்டில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் லொக்கா தனது காதலி அமானி தாஞ்சியுடன் தமிழ்நாடு தப்பிவந்தார். அதன்பின்னர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றிதிரிந்துவிட்டு, இறுதியாக கோயம்புத்தூர் வந்தனர். அங்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.

இந்நிலையில் ஜூலை 3ஆம் தேதி லொக்கா திடீரென உயிரிழந்துவிட்டார். இதையடுத்து போலியான ஆவணங்கள் தயாரித்து லொக்காவின் உடலை மதுரையில் எரியூட்டியுள்ளனர்.

இதற்கு லொக்காவின் காதலி தாஞ்சிக்கு கோவை சிவகாம சுந்தரி மற்றும் ஈரோடு தியானேஸ்வரன் ஆகியோர் உதவி செய்துள்ளனர். தற்போது அனைவரும் சிறையில் கம்பியெண்ணுகின்றனர். இது நாம் அறிந்ததே. ஆனால் தற்போது லொக்கா குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அங்கோடா லொக்கா தனது மூக்கை பெரிதாக மாற்ற, கோவையிலுள்ள மருத்துவமனை ஒன்றில், “பிளாஸ்டிக் சர்ஜரி” அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.

அப்போது தனக்கு சினிமாவில் நடிக்க ஆசையுள்ளதாகவும், விரைவில் சினிமா ஒன்றில் நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது லொக்காவின் புதிய படங்கள் வெளியாகியுள்ளன.

அந்தப் புகைப்படங்களில் அவரின் மூக்கு வழக்கத்தை விட பெரிதாக இருப்பதை பார்க்க முடிகிறது.

இலங்கை தாதாவான லொக்கா தனது அடையாளத்தை மாற்றிக் கொள்ள இவ்வாறு செய்தாரா? அல்லது நிஜமாகவே சினிமா மோகத்தில் இப்படி நடந்துகொண்டாரா? என்பது அடுத்தக் கட்ட விசாரணையில் வெளிவரும்.

ஏற்கனவே லொக்காவின் உயிரிழப்பிலும் கொலையா, தற்கொலையா? என்று இருவேறு தகவல்கள் உலாவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இலங்கை தாதா காதலி விசாரணைக்காக புழல் சிறைக்கு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.