ETV Bharat / city

பாரத் பந்த்: பல்வேறு அமைப்பினர் தொடர்போராட்டம் - பாரத் பந்த் தொடக்கம்: பல்வேறு அமைப்பினர் தொடர்போராட்டம்

உடனுக்குடன்: பாரத் பந்த்: தொடர் போராட்டங்கள்

author img

By

Published : Dec 8, 2020, 9:59 AM IST

Updated : Dec 8, 2020, 5:07 PM IST

15:42 December 08

தேனியில் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு

குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப்பட்ட போராட்டக்காரர்

தேனி மாவட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் ஜனநாயக கட்சிகள் சார்பில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி - பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக வந்த போராட்டக்காரர்கள், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை சந்திப்பில் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதில் மோடி மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.  

இதனிடையே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்ற காவல் துறையினருடன் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் நகரின் மையப்பகுதியில் மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதையடுத்து சாலையில் அமர்ந்தவர்களை வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக காவல் துறையினர் தூக்கிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

15:36 December 08

திண்டுக்கல்லில் 200க்கும் மேற்பட்டோர் கைது!

பல்வேறு கட்சியினர் கைது
பல்வேறு கட்சியினர் கைது

வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து, திண்டுக்கல் மாவட்ட பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி மற்றும்‌ கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
 
15:05 December 08

மாலை 7 மணிக்கு உள்துறை அமைச்சரை சந்திக்கும் விவசாய சங்கப் பிரதிநிதிகள்

பாரதிய கிஷான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கேட்

விவசாய சங்கப் பிரதிநிதிகள், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேச இன்று மாலை 7 மணிக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், டெல்லியின் எல்லைப் பகுதியான சிங்குப் பகுதிக்குச் சென்று, அதன்பின்பு, உள்துறை அமைச்சரை சந்திக்கவுள்ளதாக பாரதிய கிஷான் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கேட் தெரிவித்துள்ளார்.  

14:51 December 08

கர்நாடகாவில் பாரத் பந்த் எதிரொலி: காய்கறிகளை ஏற்றி வந்து போராடிய பல்வேறு அமைப்பினர்

கர்நாடகா: விவசாயிகள் விடுத்த அழைப்பை ஏற்று, பெங்களூருவில் ஏராளமான அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் டவுன்ஹால் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, போராட்டக்காரர்கள் எதிர்ப்பின் அடையாளமாக, காளைகள் பூட்டப்பட்ட வண்டியில் காய்கறிகளை ஏற்றி வந்து போராடினர். 

13:50 December 08

விவசாயிகளுக்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டத்தில் களமிறங்கிய அமைப்புகள்

போராட்டத்தில் பல்வேறு அமைப்பினர்
போராட்டத்தில் பல்வேறு அமைப்பினர்

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் இன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.  அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விவசாயிகள், வணிகர்கள், சமூக ஆர்வர்கள், அரசியல் கட்சிகள் பங்கேற்ற ஒருங்கிணைந்த போராட்டம் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, ஆம் ஆத்மி கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி அகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.   

கூட்டத்தில் பேசிய அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், "மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை முடக்க நினைக்கிறது.  நாட்டில் 80% மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கும் நிலையில், மத்திய அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கிறது.  நாங்கள் ஒட்டுமொத்தமாக வேளாண் சட்டங்களை எதிர்க்கவில்லை, இந்த சட்டங்களில் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் என உறுதியளிக்க வேண்டும்"என்றார். 

13:39 December 08

பாரத் பந்த் எதிரொலி: சென்னை - மதுரை விமான சேவை ரத்து!

சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட மதுரை விமான சேவை

சென்னை விமான நிலையத்தில் 'பாரத் பந்த்' காரணமாக பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததால், மதுரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

13:22 December 08

காசிப்பூர் - காசியாபாத்(டெல்லி - உ.பி) இடையே விவசாய சங்கத்தினர் ஒருமித்த குரலில் போராட்டம்

காசிப்பூர் - காசியாபாத்( டெல்லி - உ.பி) இடையே விவசாய சங்கத்தினர் ஒருமித்த குரலில் போராட்டம்

நாடு தழுவிய வேலை நிறுத்தம் காரணமாக, காசிப்பூர் - காசியாபாத்( டெல்லி - உ.பி) இடையே விவசாய சங்கத்தினர், வேளாண் திருத்தச் சட்டங்களால் நிகழும் பிரச்னைகளை பொதுவெளியில் எடுத்துரைத்து போராடினர். அப்போது அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

12:17 December 08

அஸ்ஸாமிலும் வேலை நிறுத்தத்திற்கு பெருகும் ஆதரவு

அஸ்ஸாமில் போராடுவதற்கு முன்பு தடுத்து நிறுத்தப்பட்ட இளைஞர்கள்

அஸ்ஸாம்: விவசாயிகள் அழைப்பு விடுத்த பாரத் பந்திற்கு, ஆதரவளிக்க அஸ்ஸாம் மாநிலம், கெளகாத்தி நகரில் அம்மாநில தலைமைச் செயலகமான ஜனதா பவன் முன்பு, கூடிய சில இளைஞர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

12:05 December 08

திருப்பூரில் 90% கடைகள் அடைப்பு

திருப்பூரில் 90% கடைகள் அடைப்பு
திருப்பூரில் 90% கடைகள் அடைப்பு

வேளாண் திருத்தச் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து, திருப்பூரில் 90% கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. 

11:38 December 08

கோவையில் 50% கடைகள் மூடல்

கோவையில் 50 % கடைகள் மூடப்பட்டுள்ளன
கோவையில் 50 % கடைகள் மூடப்பட்டுள்ளன

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்தச் சட்டங்களைக் கண்டித்து,  கோவையில் 50 விழுக்காடு கடைகள் மூடப்பட்டுள்ளன.

10:52 December 08

விவசாயிகளுக்கு ஆதரவளித்ததால் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டுச் சிறை

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டுச் சிறை
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வீட்டுச் சிறை

டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை நேற்று(டிச.07) அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் பார்வையிட்டு, அவர்களது போராட்டத்திற்கு ஆதரவளித்தார். இந்நிலையில் இன்று(டிச.08) காலை முதல் அரவிந்த் கெஜ்ரிவால், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர். 

10:35 December 08

மேற்கு வங்கம்: இடதுசாரிகள் தொடர் போராட்டம்

மேற்கு வங்கம்: ரயிலை மறித்து இடதுசாரிகள் தொடர் போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவளித்து, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இடதுசாரிக்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.  கொல்கத்தாவின் மையப்பகுதியில் அமைந்திருக்கும்  ஜடாப்பூர் ரயில் நிலையத்தில், இடதுசாரிக் கட்சியினர் ரயிலை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

10:26 December 08

தெலங்கானாவில் பேருந்துகள் நிறுத்தம்

தெலங்கானாவில் பேருந்துகள் நிறுத்தம்
தெலங்கானாவில் பேருந்துகள் நிறுத்தம்

தெலங்கானா மாநிலத்தில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி, விவசாயிகளின் போராட்டத்திற்கு முழு ஆதரவு நல்கியுள்ளது. அதனால், தெலங்கானாவின் பல்வேறு பகுதிகளில் அம்மாநிலப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. 

10:17 December 08

சென்னையில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கம்

சென்னையைப் பொறுத்தவரை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. பேருந்துகள் வழக்கம்போல், இயங்கி வருகின்றன. சில கடைகள் மூடப்பட்டிருந்தாலும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

10:07 December 08

புதுச்சேரி மாநிலத்தில் மறியல்: முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு

புதுச்சேரி: மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைக் கண்டித்து, புதுச்சேரியில் 'பந்த்' அனுசரிக்கப்படுகிறது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இங்கு பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் இயக்கப்படவில்லை. மேலும் புதுச்சேரியில் நடக்கும் அனைத்துக்கட்சிகள் சேர்ந்து செய்யும் மறியல் போராட்டத்தில், அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியும் பங்கேற்றுள்ளார். 

09:28 December 08

அத்தியாவசியப்பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 ((Essential Commodities (Amendment) Act 2020)); விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக ( மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் ((Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020)); விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) (( The Farmers (Empowerment and Protection) agreement on Price Assurance)) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் செப்.27 ஆம் தேதி மாலை இந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் இந்த 3 புதிய வேளாண் திருத்தச் சட்டங்களுக்கும் விவசாயிகளுக்கு எதிராகவும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் இருப்பதாக குற்றம்சாட்டி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த சில நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். 

இதற்கிடையே போராடிவரும் விவசாயிகள் அனைவரும் இன்று (டிச.08ஆம் தேதி) 'பாரத் பந்த்' எனப்படும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு தமிழ்நாட்டிலும் திமுக உட்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல் பல்வேறு விவசாய அமைப்புகளும் வணிக சங்கங்களும் ஆதரவளித்துள்ளன.  

அதனால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடைகள் திறக்கப்படாமல் இருக்கிறது.

Last Updated : Dec 8, 2020, 5:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.