சென்னை: பெட்ரோல், டீசல், எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் திருமண தம்பதிக்குப் பரிசாக மண் அடுப்பும், விறகுக் கட்டையும் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மதுரவாயல் அருகே தனியார் திருமண மண்டபத்தில் சரண், லத்திக்கா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மணமகனின் நண்பர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வைச் சுட்டிக்காட்டும் வகையிலும் குறிப்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைச் சுட்டிக்காட்டும் வகையிலும் மண் அடுப்பும், விறகு கட்டையும் பரிசாக வழங்கினர்.
இதனைப் பெற்றுக்கொண்ட மணமக்களிடம் நண்பர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் விலைவாசிக்கு ஏற்றாற்போல் சிக்கனமாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என கோரிக்கைவைத்தனர். இது அவர்களுக்கான கோரிக்கை மட்டுமல்ல; மக்களின் கோபத்தை அரசுக்கு உணர்த்தும் ஒரு பாடமும்கூட!
இதையும் படிங்க: 'திமுகவையும் மின்வெட்டையும் பிரிக்க முடியாது' - நத்தம் விசுவநாதன் கிண்டல்