சென்னை: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகேயுள்ள, “டேன் டீ” கடையில், தேனீருக்கும் முகக்கவசம் இலவசமாக வழங்கப்படுகிறது.
கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது முதல் அதிகளவில் நோயாளிகள், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அங்கு வரும் நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் சுற்றுகின்றனர்.
இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தின் மூலம் நடத்தப்படும் தேனீர் கடையில், முகக்கவசம் அணியாமல் கடைக்கும் வரும் வாடிக்கையாளர்களுக்கு, முகக்கவசம் இலவசமாக அளிக்கப்படுகிறது.
பாஜகவில் குஷ்பூ? சுமுகமாக இருக்குமா பயணம்...
இது குறித்து கடையின் உரிமையாளர் பிரித்தி கூறும்போது, “கடைக்கு வரும் பொது மக்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் வருகின்றனர். இது குறித்து பெரும்பாலான நோயாளிகளுக்கும், மருந்து வாங்க வருபவர்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை.
எனவே, முகக்கவசம் அணியாமல் தேனீர் வாங்க வருபவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி வருகின்றேன். கரோனா தொற்று முடியும் வரை, தொடர்ந்து இந்த சேவையை இலவசமாக செய்ய திட்டமிட்டுள்ளேன்” என்றார்.