ETV Bharat / city

மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணத் திட்டம் - மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய திட்டம் அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திருக்கோயில்கள், திருமண மண்டபங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில்
மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணத் திட்டம்
author img

By

Published : Dec 10, 2021, 2:40 PM IST

சென்னை: திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

திருக்கோயில்களில் திருமணம் செய்திட கட்டணமில்லா திருமணத் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 8 அன்று தொடங்கிவைத்து மணமக்களுக்கு திருமண வாழ்த்துகளுடன் பரிசுப் பொருள்களை வழங்கிச் சிறப்பித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு கோயில்களில் இலவச திருமணத் திட்டம்
இந்த அறிவிப்பினை நிறைவேற்றும்விதமாக சென்னை திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயிலில் மணமகன் எஸ். சுரேஷ்குமார், மணமகள் எஸ். மோனிஷா ஆகியோரின் திருமணம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.
இத்திட்டத்தைத் தொடங்கிவைத்ததன் மூலம் இனிவரும் காலங்களில் திருமணம் நடத்தவிருக்கும் மாற்றுத்திறனாளிக்குத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் திருக்கோயில்கள், திருமண மண்டபங்களில் இலவசமாக திருமணம் நடைபெறும் வகையில் வழிவகைசெய்யப்பட்டுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.