சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் ஒற்றை தலைமை விவகாரம் குறித்து இன்று (ஜூலை7) நடந்த ஆலோசனைக்கு பின் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, "நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்கின்றோம். ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடைபெற்றால், அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் செல்லாது. அப்படியும் தீர்மானங்கள் நிறைவேற்றினால், அதை எதிர்த்து நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் அணுகி பொதுக்குழு செல்லாது என மனு அளிப்போம்.
பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு ஒரு நபர் நீதிபதி கொண்ட அமர்வில் விசாரணைக்கு வர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்வோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!