ETV Bharat / city

‘இன்றைய பட்ஜெட்டை டிமிக்கி கொடுக்கிற பட்ஜெட்’ - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்.

author img

By

Published : Aug 14, 2021, 1:46 AM IST

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘இன்றைய பட்ஜெட்டை டிமிக்கி கொடுக்கிற பட்ஜெட்டாக தான் பார்க்க முடியும்’ என விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்

சென்னை: தமிழ்நாடு அரசின் 2021-22 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “திமுக தனது தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கூறியிருந்தது.

டிமிக்கி கொடுக்கிற பட்ஜெட்

கல்விக்கடன் அனைத்தையும் நாங்கள் ரத்து செய்வோம் என்றும், பெட்ரோல் டீசல் விலை ரூ.5, ரூ.4 குறைப்போம் என்றும் கூறி இருந்தார்கள். முதியோர்களுக்கான ஓய்வூதிய தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் கூறியிருந்தார்கள். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்கள்.

இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றாமல் இருப்பதற்காகவே வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் வெளியிட்டிருக்கிறார். வெள்ளை அறிக்கை வெறும் வெற்று அறிக்கை. மின் கட்டணத்தை ஏன் உயர்த்தவில்லை, பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை, சொத்து வரியை ஏன் கூட்டவில்லை என கடந்த ஆட்சியை கேள்வி கேட்கும் விதமாக அவர் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தற்போது மின் கட்டணம், பேருந்து கட்டணம், சொத்து வரி ஆகியவை உயரப்போகிறது என வெள்ளை அறிக்கையின் மூலம் மக்களுக்கு கூறியுள்ளார். இன்று (ஆக.13) நிதியமைச்சர் வெளியிட்ட டிஜிட்டல் பட்ஜெட், டிஜிட்டல் டிமிக்கி ஆகவே பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைப்போம் என்று கூறியிருந்தார்கள். யானை பசிக்கு சோளப்பொறி போல ரூ.3 குறைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். இது மக்களை ஏமாற்றும் செயல்” என்றார்.

அதிமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியது

தொடர்ந்து பேசிய அவர், “நீட் தேர்வில் அதிமுக அரசு தெளிவான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது. அதிமுகவின் தொலை நோக்கு பார்வையாக நீட்தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு பெருவதே இருந்தது. நீட் தேர்வில் விலக்கு பெரும் வரை மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியிலேயே அதிகப்படியான மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள்.

தற்போது, திமுக நீட் தேர்வில் மாணவர்களை குழப்பமடைய செய்துவிட்டது. நீட் தேர்வு எழுத விருப்பமுள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகாமல் போனதற்கு காரணம் திமுக ஆட்சிதான். நீட் தேர்வில் இருந்து திமுகவால் விலக்குப் பெற முடியாது.

கரோனா காலத்தில் வெரும் 4 ஆயிரம் ரூபாயை மக்களுக்கு கொடுத்து விட்டு, பெரிதாக திமுக அரசு பேசிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆட்சியில் அதிமுக அரசு சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டு சொல்லாததையும் செய்திருக்கிறது.

நிதி அமைச்சரின் பேச்சு தெளிவாக இல்லை

1996 - 2001ஆம் ஆண்டில் திமுக அரசு கஜானாவை காலி செய்தது. அதிமுக அரசு வந்த பிறகு தான் கஜானா நிரப்பப்பட்டது. 1996ஆம் ஆண்டிலிருந்து நிதிநிலை அறிக்கையை வெளிப்படையாக கூறியிருக்க வேண்டும். நிதி அமைச்சரின் பேச்சு தெளிவாக இல்லை.

கடனைத் திருப்பி செலுத்தும் தகுதி இருப்பதாலே கடன் வழங்கப்பட்டது. அதிமுக அரசு பொருளாதார ரீதியிலாக தமிழ்நாட்டை வலுப்படுத்தியுள்ளது என்பது தான் உண்மை. சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கொண்டு வந்தது திமுக தான். அதனால் நமது சில்லறை வியாபாரம் செய்யும் வணிகர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு விட்டனர்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் இனிப்பு, புளிப்பு, கசப்பு கலந்த கலவை - ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.