உலகம் முழுவதும் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அந்தந்த நாடுகளில் வாழும் வெளிநாட்டவர் தம் சொந்த நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அதனடிப்படையில், வெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை அரசு சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் அழைத்து வருகிறது. அதன்படி, ஓமன் நாட்டின் மஸ்கட்டிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் 209 இந்தியா்களுடன் நேற்று (ஜூலை 24) இரவு சென்னை வந்தது.
அதேபோல், சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம், அமெரிக்காவின் சிக்காகோ நகரிலிருந்து 32 இந்தியா்களும், மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 178 இந்தியா்களும் நேற்றிரவு சென்னை வந்தனர். மேலும், இலங்கையிலிருந்து இன்று காலை 14 இந்தியா்களுடன் சிறப்பு மீட்பு விமானம் சென்னை வந்தது.
அவ்வாறு வந்த பயணிகள் அனைவருக்கும், மருத்துவ பரிசோதனை, குடியுரிமை, சுங்கச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனா். பின்னர் அனைவரும் அவரவர் விருப்பப்படி தமிழ்நாடு அரசின் சிறப்பு முகாம்களிலும், கட்டண தங்கும் ஹோட்டல்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பு வழிமுறைகள்!