ETV Bharat / city

ரூ 50 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சி பறிமுதல் - 5 பேர் கைது! - சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்

வெளிநாட்டு கரன்சிகளை எடுத்து செல்ல முயன்ற ஐந்து பேர், சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டன.

foreign currency
foreign currency
author img

By

Published : May 26, 2022, 6:30 AM IST

சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்காக வந்திருந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அப்போது துபாய் செல்லவிருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த நஜிருதீன்(30), ராஜா முகமது(32), ஜாகீர் உசேன் (32), கொழும்பு செல்வதற்காக வந்த விஷ்ணு சாகர்(28), பாங்காக் செல்வதற்காக வந்த சென்னையை சேர்ந்த அப்சர் அலி(27) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து, அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆடைக்குள் வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். செருப்பில் இருந்தும் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள், சவூதி ரியால்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

5 பேரிடம் இருந்தும் 50 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக 5 பேரையும் கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:அண்ணா பல்கலைக் கழகத்தில் மேலும் 3 மாணவர்களுக்குக் கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.