கரோனா தொற்று குறித்து மக்கள் நல்வாழ்வு துறை புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 113 ஆய்வகங்களில் புதிதாக 58 ஆயிரத்து 475 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்த 5,775 நபர்களுக்கும், வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு திரும்பிய 74 நபர்கள் என ஒரே நாளில் 5849 நபர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை 20 லட்சத்து 15 ஆயிரத்து 147 நபர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 492 நபர்கள் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 51 ஆயிரத்து 765 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் குணமடைந்த 4,910 நபர்கள் இன்று (ஜூலை 22) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 583 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 22) மட்டும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700ஆக அதிகரித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உயிரிழந்தவர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 444 நபர்கள் இறந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதனையும் சேர்த்தால் 3,144 பேர் இறந்துள்ளனர். சென்னையில் நோய் பரவும் வேகம் சற்று குறைந்திருந்தாலும் தென்மாவட்டங்களில் நோய் பரவலின் வேகம் அதிகரித்துவருகிறது.
மாவட்டம் வாரியாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் அட்டவணை;
சென்னை -89,561
செங்கல்பட்டு - 10,495
திருவள்ளூர் - 10, 210
மதுரை - 8,705
காஞ்சிபுரம் - 5,697
திருவண்ணாமலை - 4,444
வேலூர் - 4,359
விருதுநகர் - 4,287
தூத்துக்குடி - 4,241
திருநெல்வேலி - 2,972
தேனி - 2,899
ராணிப்பேட்டை - 2,784
கன்னியாகுமரி - 2,721
திருச்சிராப்பள்ளி - 2,686
ராமநாதபுரம் - 2,692
சேலம் - 2,560
கோயம்புத்தூர் - 2,539
கள்ளக்குறிச்சி - 2,517
விழுப்புரம் - 2,501
கடலூர் - 1,991
திண்டுக்கல் - 1,826
சிவகங்கை - 1,760
தஞ்சாவூர் - 1,422
தென்காசி - 1,344
புதுக்கோட்டை - 1,186
திருவாரூர் - 1,059
அரியலூர் - 710
திருப்பத்தூர் - 659
ஈரோடு - 518
திருப்பூர் - 567
நீலகிரி - 528
கிருஷ்ணகிரி - 520
நாகப்பட்டினம் - 480
தருமபுரி - 486
நாமக்கல் - 395
கரூர் - 296
பெரம்பலூர் - 248
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 742
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 461
ரயில் மூலம் வந்தவர்கள்: 424