ETV Bharat / city

பனிமூட்டம், புகைமூட்டம் - சென்னையில் விமான சேவை பாதிப்பு - புகைமூட்டம்

சென்னை: விமானநிலையப் பகுதியில் கடும்பனி, போகி புகைமூட்டம் காரணமாக காலை 6 மணியிலிருந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

flights
flights
author img

By

Published : Jan 14, 2020, 1:30 PM IST

சென்னையில் ஏற்பட்டுள்ள கடும் பனிமூட்டம், போகி பண்டிகையையொட்டி ஏற்பட்ட புகைமூட்டம் ஆகியவை காரணமாக, சென்னைக்கு வரவேண்டிய விமானங்களான மஸ்கட், சார்ஜா, அபுதாபி, கோலாலம்பூா், சிங்கப்பூர், ஹைதராபாத், திருவனந்தபுரம், மும்பை, புனே, பெங்களூா், அகமதாபாத், கொல்கத்தா உள்ளிட்ட 16 விமானங்களும், அதேபோல் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களான மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, வாரணாசி, கோவை, தூத்துக்குடி, திருவனந்தபுரம், கொல்கத்தா, கொச்சி, மஸ்கட், அபுதாபி, கோலாலம்பூா், கொழும்பு, சிங்கப்பூா், துபாய், லண்டன் உள்ளிட்ட 26 விமானங்களும் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.

பனிமூட்டம், போகி புகைமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 42 விமானங்கள் ஒரு மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. மொரீசியசிலிருந்து பெங்களூா் வழியாக காலை 6:15 மணிக்கு, சென்னை வந்துவிட்டு மீண்டும் காலை 7:45 மணிக்கு சென்னையிலிருந்து மொரீசியஸ் செல்லும் ஏர் மொரீசியஸ் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது. விமான சேவைகள் பாதிப்பால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். ஆனால், விமானங்கள் தாமதம் குறித்து பயணிகளுக்கு முறையாக எந்த அறிவிப்பும் கூறப்படவில்லை என்பதே பயணிகளின் அவதிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: போகி: புகை மூட்டத்துடன் காணப்படும் சென்னை!

Intro:சென்னை விமான நிலைய பகுதியில் கடும்பனி மூட்டம்,போகி புகைமூட்டம் காரணமாக காலை 6 மணிக்கு மேல் விமான சேவைகள் பாதிப்புBody:சென்னை விமான நிலைய பகுதியில் கடும்பனி மூட்டம்,போகி புகைமூட்டம் காரணமாக காலை 6 மணிக்கு மேல் விமான சேவைகள் பாதிப்பு.சென்னைக்கு வரவேண்டிய விமானங்களான மஸ்கட்,சாா்ஜா,அபுதாபி,கோலாலம்பூா், சிங்கப்பூா்,ஹைதராபாத்,திருவனந்தபுரம், மும்பை,புனே, பெங்களூா்,அகமதாபாத்,கொல்கத்தா உள்ளிட்ட 16 விமானங்களும், அதைப்போல் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களான மும்பை,ஹைதராபாத்,பெங்களூரு,வாரணாசி,கோவை,தூத்துக்குடி, திருவனந்தபுரம், கொல்கத்தா,கொச்சி, மஸ்கட்,அபுதாபி,கோலாலம்பூா்,கொழும்பு, சிங்கப்பூா்,துபாய், லண்டன் உள்ளிட்ட 26 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.பனிமூட்டம்,போகி புகைமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 42 விமானங்கள் ஒரு மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. மொரிசீயஸ்சிலிருந்து பெங்களூா் வழியாக காலை 6.15 மணிக்கு சென்னை வந்துவிட்டு மீண்டும் காலை 7.45 மணிக்கு சென்னையிலிருந்து மொரீசியஸ் செல்லும் ஏா்மொரீசியஸ் விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது.விமானசேவைகள் பாதிப்பால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதியடைந்தனா். ஆனால் விமானங்கள் தாமதம் பற்றி பயணிகளுக்கு முறையாக எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.