சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “பல்வேறு துறைகளில் மாநில அரசு சிறப்பாகச் செயல்படுகிறது. கடந்த ஆண்டை போல சிறந்த சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்படும் மாநிலத்திற்கான இந்தியா டுடே விருதை டெல்லியில் பெற்றுக்கொண்டேன்.
முதலமைச்சர் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக ஆரம்பிக்கும் விழாவில் இருந்ததால் நான் பெற்றுக்கொண்டேன், என்று கூறினார்.
“மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை தனிப்பெரும் கட்சியாக பாஜகவிற்கு மக்கள் வாக்களித்துள்ளார்கள், தேசியவாத காங்கிரஸ் பொறுத்தவரை சரத்பவார் கட்சிக்குத் தான் தலைவர். சட்டப்பேரவை குழுத்தலைவர் அஜித்பவார் முழு ஆதரவோடு தான் ஆட்சி அமைத்துள்ளார்கள். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியிருக்கும். தேர்தலில் அதிக செலவினம், உழைப்பு வீணாகிவிடக்கூடாது. மீண்டும் தேர்தல் வரக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் சாதி மத சண்டைகள் எதுவும் இல்லை என்றார்.