ETV Bharat / city

பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர்கள் நலவாரியம் : தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு! - தமிழ்நாடு அரசு அரசாணை

பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிடுள்ளது.

பட்டாசு, தீப்பெட்டித் தொழிலாளர்கள் நலவாரியம்

author img

By

Published : Dec 30, 2020, 6:16 PM IST

சென்னை: விருதுநகரில் கடந்த மாதம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கென நலவாரியம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இது குறித்து வெளியிப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியம், தொழிலாளர் நலத்துறை அமைச்சரைத் தலைவராக கொண்டு, செயலாளர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆகியோரை அரசு பிரதிநிதிகளாகவும், அலுவல்சாரா உறுப்பினர்களாக, வேலையளிப்போர் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை சார்பான பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை சார்பான பிரதிநிதி, தொழிற் கூட்டமைப்பின் பிரதிநிதி ஆகியோரும், தொழிலாளர்கள் பிரதிநிதிகளாக பட்டாசு தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி, தீப்பெட்டி தொழிற்சாலை தொழிற்சங்கத்தின் பிரதிநிதி மற்றும் பிற தொழிற்சங்க பிரதிநிதி ஆகியோர் அடங்கிய வாரியம் அமைப்பதற்கு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள 62661 பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு இந்நலவாரியம் தொடங்கப்படும். இன்றைய தேதியில் 1250 பட்டாசு தொழிற்சாலைகளும், 870 தீப்பெட்டி தொழிற்சாலைகளும் உரிமம் பெற்று இயங்கி வருகின்றன.

ஏறத்தாழ 1,20,000 தொழிலாளர்கள் இத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருவதாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் தெரிவித்துள்ளார். இத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் புதிதாக அமைக்கப்படவிருக்கும் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து பயன் பெறலாம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செவிலியர் உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.