கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காக சென்னை மாநகரப் பகுதிகளில் பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் மற்றும் மக்கள் கூடும் பகுதிகளில் நோய்த் தொற்றும் கிருமிகளை எளிதில் அழிக்க இயலாததால் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சென்னை நகரில் உள்ள அனைத்து பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி திரவம் கலந்த தண்ணீரை அடித்து சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இச்சமயத்தில் பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் கிருமிநாசினி தெளித்து எளிதாக கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என்பதால் சென்னை மெரினாவில் உள்ள எழிலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் மற்றும் பிற பொதுமக்கள் கூடும் இடங்களில் தீயணைப்புத் துறையினர் தங்கள் பங்கிற்கு சுத்தப்படுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.