ETV Bharat / city

சென்னை; 3,340 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்!

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 3 ஆயிரத்து 340 கிலோ கிராம் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 8 லட்சத்து 14 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

fine for using banned plastics
fine for using banned plastics
author img

By

Published : Oct 29, 2021, 10:42 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் தமிழ்நாடு அரசால் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல், உபயோகித்தல் ஆகியவற்றிற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பொருள்களான உணவுப்பொருள்களை கட்ட பயன்படுத்தும் நெகிழித் தாள் அல்லது உறை, உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் நெகிழித் தாள், தெர்மாக்கோல் தட்டுகள் போன்ற 14 வகையான நெகிழிப் பொருள்கள் தடைசெய்யப்பட்டுள்ளது.

அரசின் அறிவுறுத்தல்களை மீறி தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உபயோகப்படுத்துபவர்களிடமிருந்து அப்பொருள்களை மாநகராட்சி பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகிறது.

அதனடிப்படையில், நேற்று (அக்., 27) ஒருநாள் மட்டும் மாநகராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட களஆய்வின்போது, 66.80 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட நெகிழி பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.23,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆக.8ஆம் தேதி முதல் நேற்று வரை 9,058 வணிக நிறுவனங்கள், அங்காடிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3339.91 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 8 லட்சத்து 14 ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக மாநகராட்சி விதித்துள்ளது.

இதையும் படிங்க: ஆர்யன் கான் கைது முதல் ஜாமீன்வரை: கடந்து வந்த பாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.