ETV Bharat / city

செஸ் ஒலிம்பியாட் போட்டி: தயார் நிலையில் மகாபலிபுரம்! - செஸ் ஒலிம்பியாட்

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை தொடங்க இருக்கும் நிலையில் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தயார் நிலையில் மகாபலிபுரம்!

author img

By

Published : Jul 27, 2022, 5:29 PM IST

Updated : Jul 27, 2022, 7:02 PM IST

சென்னை: 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையை அடுத்து மாமல்லபுரம் அருகில் உள்ள பூஞ்சேரி தனியார் விடுதியில் நடைபெற உள்ளது. 187 நாடுகளில் இருந்து 2,000 மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நாளை இப்போட்டியானது தொடங்க இருக்கும் நிலையில் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

எந்த பக்கம் திரும்பினாலும் சர்வதேச செஸ் போட்டிகள் குறித்த விளம்பர பதாகைகளும், சுவர் ஓவியங்களும், தம்பி குதிரையின் சிலைகள் காணப்படுகிறது. துறை வாரியாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அதன்படி, பொதுப்பணி துறையின் மூலமாக ரூபாய் 53 கோடி செலவீட்டில் OMR மற்றும் ECR சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

காவல்துறை சார்பில் செஸ் ஒலிம்பியாட் பாதுகாப்பு பணிக்கான 4,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். போட்டி நடைபெறும் பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியை மற்றும் சுற்று வட்டாரங்களில் மட்டும் ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மின்சாரத் துறை சார்பில் இன்று முதல் போட்டி நடந்து முடியும் வரை மாமல்லபுரத்தை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 500 KVA மின்மாற்றி (Transformer) தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் CCTV கேமரா மூலம் தொடந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சுகாதாரத்துறை சார்பில் வெளிநாட்டிலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் தமிழ்நாடு வருவதால் 8 மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் 198 மருத்துவர்கள் 74 செவிலியர்கள் உட்பட 433 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் அவசரத்திற்காக 30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டி: தயார் நிலையில் மகாபலிபுரம்!

சுற்றுலாத் துறை சார்பில் மாமல்லபுரத்தையும் போட்டி நடைபெறும் இடத்தையும் இணைக்கும் வகையில் 25 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளன, 5 இலவச பேருந்து சேவை அளிக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாணவர்களுக்கு ஏற்கனவே போட்டி நடத்தப்பட்டு அதிலிருந்து தேர்வு பெறும் மாணவர்கள் நேரில் பார்ப்பதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இரண்டு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 1,414 போட்டியாளர்கள் ஒரே சமயத்தில் இது நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். போட்டிக்கு வரும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக 400 தன்னார்வலர்கள் இங்கு தயார் நிலையில் உள்ளனர். பிரம்மாண்டமாக நடைபெறுவதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட்: நேரு உள்விளையாட்டு அரங்கில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Last Updated : Jul 27, 2022, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.