சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சிகர் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையங்களின் தலைவர் பதவி, 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் காலியாக இருப்பதாக புகார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி, சேலம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையங்களில் முழுநேரத் தலைவர் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 19 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் நிரந்தர உறுப்பினர்கள் இல்லாததால், வழக்கு தொடரும் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்தி சுகுமார குருப் அமர்வு, மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.
இதையும் படிங்க: ஆள்மாறாட்டம் செய்து ஒன்றரை கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த இருவர் கைது!