சென்னை: அதிமுக பொதுக்குழு இன்று (ஜூலை 11) நடைபெறும் நிலையில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினரிடையே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
பொதுக்குழு நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் வர உள்ள நிலையில் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனையடுத்து அங்கு ஒரு உதவி ஆணையர் மற்றும் இரண்டு காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி ஒருவொருக்கொருவர் தாக்கி கொண்டுள்ளனர். கைகலப்பில் ஈடுபடும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு 2.0: தீர்ப்பை எதிர்நோக்கி தலைமைகள்...