ETV Bharat / city

அம்பேத்கர் சிலைக்கு மாலையிடும்போது விசிக - பாஜக மோதலால் பரபரப்பு! - சிலைக்கு மாலையிடும் போது விசிக-பாஜக மோதல்

நாடு முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாள் இன்று ஏப்.14இல் கொண்டாடப்படுகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் விசிக மற்றும் பாஜகவினருக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு பாஜகவினர் மற்றும் ஒரு காவலருக்கு மண்டை உடைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விசிக-பாஜக மோதல் கோ
விசிக-பாஜக மோதல் கோ
author img

By

Published : Apr 14, 2022, 4:28 PM IST

சென்னை: சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (ஏப்.14) அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களும் ஆங்காங்கே அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை வந்தார். அப்போது விசிக தொண்டர்கள் சிலைக்கு அருகே இருந்த கம்பத்தில் விசிகவின் கொடியைக் கட்டி ஜெய்பீம் கோஷங்களை எழுப்பினர்.

இதனையடுத்து திருமாவளவன் மாலையிட்டு சென்ற பின்பு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் மாலையிட வருவதாக அறிந்து, அங்கிருந்த பாஜக தொண்டர்கள் கம்பத்தில் இருந்த விசிக கொடியை நீக்கிவிட்டு பாஜக கொடியைக் கட்டியதாகக் கூறப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை
இதைத் தொடர்ந்து, விசிக மற்றும் பாஜக தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின் கைகலப்பாக மாறியது. அப்போது கூட்டத்தில் இருந்த விசிகவினர், கீழே கிடந்த கற்களை எடுத்து வீசி மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் பாஜகவைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், செந்தில் மற்றும் காவலர் ஒருவர் என மூன்று பேரின் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது.

இதனால், சலசலப்பு ஏற்பட்டதால் உடனடியாக விசிகவினரை கைது செய்ய வேண்டும் என பாஜக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை சமாதானம் செய்யும் பணியில் கோயம்பேடு போலீசார் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் போட்டா போட்டி : பாஜக-விசிக வாக்குவாதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.