சென்னை: ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் மூலம் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 863 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனாவைத் தடுக்க தடுப்பூசிதான் ஒரே ஆயூதம் என்ற நிலையில் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று தமிழ்நாடு அரசு மெகா தடுப்பூசி முகாமை நடத்திவருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திவரும் நிலையில், நேற்று ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 1,600 மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன. மருத்துவமனைகள், சமுதாயக் கூடங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 863 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக அடையாறு மண்டலத்தில் 16 ஆயிரத்து 21 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக தண்டையார்பேட்டை மண்டலத்தில் 15 ஆயிரத்து 690 நபர்களுக்கும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 15 ஆயிரத்து 230 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.