முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு, சிறுநீரக தொற்று, வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற பரோல் வழங்கப்பட்டது.
பரோல் முடிந்து இன்று சிறைக்கு திரும்ப இருந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக பேரறிவாளனுக்கு அடுத்த மாதம் 26ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் பேரறிவானனுக்கு தொடர்ந்து பரோல் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 5ஆவது முறையாக அவருக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பேரறிவாளன் மருத்துவமனையில் அனுமதி