சென்னை: தமிழ்நாடு அரசு, கார்டெலியா க்ரூஸ் நிறுவனதுடன் இணைந்து ஆழ்கடல் சுற்றுலாவை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு சொகுசு கப்பலின் புதிய அனுபவத்தையும், திகில் நிறைந்த ஆழ்கடல் பயண அனுபவத்தையும் அளிக்கும் வகையில் இந்த பயணம் அமைய இருக்கிறது.
தமிழ்நாடு மக்களின் நீண்ட நாள் கனவு: இந்தியாவில் கோவா, மும்பை போன்ற சில பெருநகரங்களில் மட்டுமே சொகுசு சுற்றுலா கப்பல் பயணம் இருந்து வந்தது. இந்நிலையில் முக்கியமான கடற்கரையை தன்னகத்தே கொண்டுள்ள சென்னையிலும், இதுபோல சொகுசு கப்பல் பயணம் தொடங்கப்படுமா? என்று தமிழ்நாடு மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்றின் காரணமாக மக்கள் எங்கும் செல்லாத இந்நிலையில் வீட்டிலேயே தங்கி இருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையிலும், கனவை நனவாக்கும் வகையிலும் சென்னையில் சொகுசு கப்பல் பயணம் இப்போது சாத்தியமாகி இருக்கிறது. தமிழ்நாடு மக்களுக்கு சொகுசு கப்பலின் புதிய அனுபவத்தையும், திகில் நிறைந்த ஆழ்கடல் பயண அனுபவத்தையும் அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாட்டில் சொகுசு கப்பலில் சுற்றுலா செல்ல 'கார்டிலியா குருசஸ்' (Cordelia Cruises) என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடல்வழி எம்பிரஸ் (Empress cruise) சொகுசு கப்பல் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த (ஜுன் 4), கார்டிலியா குருசஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்திய கடல்வழி எம்பிரஸ் சொகுசு கப்பல் சுற்றுலாப் பயணத்தை தொடங்கி வைத்து, அக்கப்பலை பார்வையிட்டார்.எம்பிரஸ் சொகுசு கப்பல்: 700 அடி நீளமும், 11 அடுக்குகளையும் கொண்ட இந்த சொகுசு கப்பலில் 979 அறைகள் உள்ளது. ஒரே நேரத்தில் 1950 பயணிகள் மற்றும் 800 பணியாளர்கள் என 2750 பேர் வரை இந்த சொகுசு கப்பலில் பயணிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. ஒரே நேரத்தில் 1,000 பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையிலான கலையரங்கம், 10 பெரிய ரெஸ்டாரண்டுகள், மதுக்கூடம், உடற்பயிற்சிக் கூடம், ஸ்பா, மசாஜ் செண்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த சொகுசு கப்பலில் இடம் பெற்றிருப்பது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரை 2 நாட்களும், துறைமுகம்-விசாகப்பட்டினம்-புதுச்சேரி சென்று மீண்டும் துறைமுகம் வரை 5 நாட்கள் பயணம் என 2 பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்பட உள்ளது.
பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சொகுசுகப்பல் ரூ.40 ஆயிரம் கட்டணம்: நவீன வசதிகளை உள்ளடக்கிய இந்த 'எம்பிரஸ்' கப்பலில் பயணிப்பதற்கான கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் (2 பேருக்கு) என்றும், அதிகபட்சமாக ரூ.1½ லட்சம் என்றும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டணத்துக்குள்ளேயே உணவும், தங்கும் செலவும் அடங்கும். மேலும் 2 நாட்கள், 3 நாட்கள், 5 நாட்கள் என 'பேக்கேஜ்' அடிப்படையிலும் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய, சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர் பி.சந்தர மோகன், 'சென்னை துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் வரை முதற்கட்டமாக வாரத்தில் இரண்டு நாட்கள் பயணிகளை ஏற்றிச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வெளிநாடுகளுக்கு பயணம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும். பயணிகள் சென்னை நோக்கி வருவது காரணமாக இங்கு உள்ள ஓட்டல்கள், போக்குவரத்து பயணம் உள்ளிட்டவை மூலம் மறைமுகமாக தமிழ்நாட்டிற்கு வருமானம் கிடைக்க பெரும் என்று தெரிவித்துள்ளார். சொகுசு கப்பலுக்குள் திரையரங்கு வசதிகள் இதுகுறித்து நம்மிடம் பேசிய கப்பல் பயணிகள், 'இதுவரை தாங்கள் கப்பலில் செல்லாத நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு இணைந்து வழங்கும் இந்த கப்பல் பயணத்தில் ஆவலாக உள்ளோம். மேலும், இந்த இரண்டு நாள் பயணத்தில் பல புதிய அனுபவத்தை எதிர்பார்க்கிறோம்' என்று தெரிவித்தனர். இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முதல் சொகுசு கப்பல் சுற்றுலா பயணத்தை தொடங்கிவைத்தார் ஸ்டாலின்