ETV Bharat / city

'இது தந்தையின் தாலாட்டு' - தந்தையர் தின ஸ்பெஷல்.. - பிள்ளைகளின் ஹீரோ

சில பிள்ளைகள் அப்பாவின் பேச்சை அச்சுப் பிசையாமல் பின்பற்றுவார்கள். சிலர் அப்பா எது சொன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாகவே நடந்து கொள்வர். ஆனால் அப்பாவின் மேல் அவர்கள் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் வெளிகாட்ட முடியாத அளவிற்கு அவர்களின் மனதில் பரவிக் கிடக்கும்.

'இது தந்தையின் தாலாட்டு'  தந்தையர் தின ஸ்பெஷல்..

author img

By

Published : Jun 20, 2021, 7:42 AM IST

Updated : Jun 20, 2021, 10:51 AM IST

தாய்மார்களில் பலர் குடும்பச் சூழ்நிலையை, தாங்கள் அனுபவிக்கும் துயரங்களை, பிள்ளைகளுக்கு செய்வதை சொல்லிக் காட்டி விடுவர். ஆனால் தந்தை ஒருபோதும் அதை செய்திருக்க மாட்டார். எவ்வளவு துயரம் என்றாலும் குடும்பத்திற்காக உழைத்து கொட்டுவார். பிள்ளைகளின் நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பார். அப்பாக்கள் தான் எத்தனை ஆதுரமானவார்கள்.

எப்படி வந்தது?

தந்தையருக்கு மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாக உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினம் கொண்டாடப்படும் தேதி நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் ஜூன் 3ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

தெய்வத்திருமகன்

அமெரிக்காவில் 1909இல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம் பெண் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது ஏன் தந்தையர் தினம் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார். இவர், தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம், ஆறு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார்.

ஆண் தேவதை
ஆண் தேவதை

இது தான், தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன்படி 1910ஆம் ஆண்டு முதன் முதலில்ல தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972இல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

தகப்பனின் அணைப்பிலே கிடந்தது ஓர் சுகம்

தந்தைகளின் மாண்பை தரணிக்கு உணர்த்திய தீர்த்த கவி நா.முத்துக் குமார். அம்மாக்கள் குறித்து தமிழ் சினிமாவில் வந்த எண்ணற்ற பாடல்களுக்கு மத்தியில் அப்பாக்கள் குறித்து அவர் எழுதிய பாடல்தான் குன்றின் மேல் இட்ட விளக்காய் இன்றும் ஒளிர்கிறது. "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே.. தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே.." இந்த பாடல் வரிகள் பெரும்பாலான பிள்ளைகள் எழுதாத கவிதைகள். இந்த வரிகள் அவருக்கு மட்டும் அல்ல. அனைத்து பிள்ளைகளுக்கும் சொந்தமானது.

அப்பாவின் சாயிலில்..

பிள்ளைகள் விரல் பிடித்து நடந்தது, தோளில் ஏறி மிதித்தது, யானை சவாரி சென்றது, கன்னத்தில் கடித்தது என இவைதான் தந்தைகளின் பொக்கிஷங்களாக இருக்கும். தந்தை நம்மை தூக்கி எறிகிறார் என்று தெரிந்தும் குழந்தை சிரித்து கொண்டுதான் இருக்கும், தந்தை நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில்.

மக்கட்பேறும் கைமாறும்

தற்போதைய சூழலுக்கு தகுந்தவாறு பிள்ளைகளுக்கு பல பாடங்களை சொல்லித் தர வேண்டிய கட்டாயத்தில் தந்தையர்கள் இருக்கின்றனர். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், கூடா நட்பு, கேடு விளைவிக்கும் பழக்க வழக்கங்கள், அளவற்ற ஆடம்பரம், வெளியே சொல்ல முடியாத ரகசியம் என பல விஷயங்களில் இந்த தலைமுறை தோல்வியை தழுவிகிறது. இவற்றை பிள்ளைகள் காணாதிருக்க வேண்டியதே, தந்தை மகற்காற்றும் நன்றி.

மகளை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும்

அதே நேரத்தில் பிள்ளைகளும் தலைக்கு மேல் நம்மை உட்கார வைத்து அழகு பார்த்த அப்பாவை ஒருபோதும் தலை குனிய வைத்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். இதுவே இந்த தந்தையர் தினம் நமக்கு சொல்லும் ஸ்மால் டிப்ஸ். இதுவே மகன் தந்தைகாற்றும் உதவி.

இதையும் படிங்க: தந்தைகளின் மாண்பை தரணிக்கு உணர்த்திய தீர்த்த கவி

Last Updated : Jun 20, 2021, 10:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.